search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புனித வெள்ளி"

    • இன்று புனித வெள்ளியில் இயேசு கிறிஸ்துவின் ஆழமான தியாகத்தை நினைவு கூறுகிறோம்.
    • அது நமக்கு கற்பிக்கும் இரக்கம் மற்றும் மன்னிப்பின் பாடங்களில் ஒவ்வொருவரும் பலம் பெறட்டும் என்று கூறியுள்ளார்.

    புதுடெல்லி:

    புனித வெள்ளியையொட்டி பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    இன்று புனித வெள்ளியில் இயேசு கிறிஸ்துவின் ஆழமான தியாகத்தை நினைவு கூறுகிறோம். அது நமக்கு கற்பிக்கும் இரக்கம் மற்றும் மன்னிப்பின் பாடங்களில் ஒவ்வொருவரும் பலம் பெறட்டும் என்று கூறியுள்ளார்.

    • புனித வெள்ளிக்கு முந்தைய தினம் புனிய வியாழனாக கடைபிடிக்கப்படுகிறது.
    • கத்தோலிக்க ஆலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி நடைபெறும்.

    திருவனந்தபுரம்:

    கிறிஸ்தவர்களின் தவக்காலத்தில் புனித வெள்ளிக்கு முந்தைய தினம் புனிய வியாழனாக கடைபிடிக்கப்படுகிறது. அன்றைய தினத்தில் கத்தோலிக்க ஆலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி நடைபெறும்.

    இந்த ஆண்டு புனித வியாழன் பாதம் கழுவும் நிகழ்ச்சி நாளை (28-ந்தேதி) நடைபெறுகிறது. இந்த சடங்கில் பெண்கள் பெண்களின் கால்களை கழுவும் நிகழ்வை இந்திய கிறிஸ்தவ பெண்கள் இயக்கம் கேரளாவில் நடத்தி வருகிறது. இந்த நிகழ்வை கடந்த 2018 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் நிகழ்ச்சிகளை நடத்தியது.

    அதன்பிறகு அதுபோன்ற ஒரு நிகழ்ச்சியை தற்போது நடத்த உள்ளது. இதில் அனைத்து தேவாலய பிரிவுகளை சேர்ந்த ஏராளமான பெண்கள் பங்கேற்பார்கள் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதுகுறித்து இந்திய கிறிஸ்தவ பெண்கள் இயக்கத்தின் முன்னாள் செயலாளர் சாந்தி மத்தாய் கூறியிருப்பதாவது:-

    தேவாலயத்தில் நடக்கும் சடங்குகள் பொதுவாக ஆண் ஆதிக்கம் செலுத்துவதாக இருக்கின்றன. பாதிரியார் ஒருசில ஆண்களின் கால்களை கழுவுகிறார். அந்த சடங்கை ஒரு பொது இடத்துக்கு மாற்றுவதன் மூலம் ஒற்றுமையை மேம்படுத்துவதையும், சமூக தடைளை உடைப்பதையும் இந்திய கிறிஸ்தவ பெண்கள் இயக்கம் நோக்கமாக கொண்டுள்ளது.

    ஆகவே பெண்கள் பெண்களின் கால்களை கழுவும் நிகழ்வை நடத்துகிறோம். இந்த சடங்கு அனைத்து பாலினத்தவர்களையும் அனைத்து மதத்தினரையும் அனுமதிக்கும் வகையில் தேவாலயத்துக்கு வெளியே நடைபெறும். அது பரஸ்பர மரியாதை. ஏற்றுக்கொள்ளுதல் மற்றும் சமத்துவத்தின் அடையாளமாக மாறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நாளை (28-ந்தேதி) முதல் வருகிற 1-ந்தேதி வரை 200 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
    • அரசு விரைவு போக்குவரத்து கழக முன்பதிவு மையங்களிலும், இணைய தள முன்பதிவு மையங்களிலும் முன்பதிவு செய்து பயணிகள் பயணம் செய்யலாம் என்று போக்குவரத்து அதிகரிகள் தெரிவித்துள்ளனர்.

    சேலம்:

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சேலம் கோட்டம் சார்பில் வருகிற 29-ந்தேதி முதல் புனித வெள்ளி மற்றும் வார இறுதி நாட்கள் விடுமுறையையொட்டி நாளை (28-ந்தேதி) முதல் வருகிற 1-ந்தேதி வரை 200 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    இதையொட்டி சேலம் புதிய பஸ்நிலையம், பெங்களூரு, சென்னை கோயம்பேடு, ஓசூர், கோவை, திருப்பூர், திருவண்ணாமலை, சிதம்பரம் பஸ் நிலையத்தில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. சென்னையில் இருந்து சேலம், நாமக்கல், ஓசூர், தருமபுரி, மேட்டூருக்கும், சேலத்தில் இருந்து சென்னை, மதுரை, பெங்களூருக்கும் இயக்கப்படுகின்றன.

    அதே போல ஓசூரில் இருந்து சென்னை, திருச்சி, மதுரைக்கும், நாமக்கல்லில் இருந்து சென்னைக்கும், திருச்சியில் இருந்து ஓசூருக்கும், திருவண்ணாமலையில் இருந்து பெங்களூருவிற்கும், ஓசூரில் இருந்து சேலம், புதுச்சேரி, கடலூருக்கும், சேலத்தில் இருந்து சிதம்பரம், காஞ்சிபுரத்திற்கும், ஈரோட்டில் இருந்து பெங்களூருவிற்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    இந்த பஸ்களை அரசு விரைவு போக்குவரத்து கழக முன்பதிவு மையங்களிலும், இணைய தள முன்பதிவு மையங்களிலும் முன்பதிவு செய்து பயணிகள் பயணம் செய்யலாம் என்று போக்குவரத்து அதிகரிகள் தெரிவித்துள்ளனர்.

    • பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்கலாம்
    • இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்

    புனித வெள்ளி மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு அரசுப் போக்குவரத்துக்கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

    சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணமலை. திருச்சி. கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி. நகார்கோவில் கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 28/03/2024 (வியாழக் கிழமை) அன்று 605 பேருந்துகளும் 29/03/2024 (வெள்ளிக்கிழமை) அன்று 300 பேருந்துகளும். 30/03/2024 (சனிக்கிழமை) 345 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது.

    கோயம்பேட்டில் இருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூர் ஆகிய இடங்களுக்கு 28, 29 மற்றும் 30 ஆகிய நாட்களில் 120 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை, பெங்களூரு திரும்பவும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    பெங்களூர், திருப்பூர். ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

    பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்கலாம்.

    இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    • தவக் காலம் வருகிற 14-ந்தேதி முதல் தொடங்குகிறது.
    • கிறிஸ்தவர்கள் உபவாசம் இருந்து ஜெபிப்பார்கள்.

    சென்னை:

    கிறிஸ்தவர்களின் தவக் காலம் வருகிற 14-ந்தேதி முதல் தொடங்குகிறது. இயேசு வனாந்தரத்தில் நோன்பு இருந்த 40 நாட்களை நினைவு கூர்ந்து கிறிஸ்தவர்கள் உபவாசம் இருந்து ஜெபிப்பார்கள். இந்த காலத்தை தவக் காலம், தபசு காலம், இலையுதிர் காலம் என்று கூறுவது உண்டு.

    40 நாட்கள் கிறிஸ்தவர் கள் நோன்பு இருந்து தம்மை தாமே வெறுத்து தங்களுக்கு பிடித்த காரியங்களை தவிர்த்து ஆண்டவனை தியானிப்பார்கள். உண்ணும் உணவு, உடைகள் போன்ற அலங்காரங்களை தவிர்த்து பிறருக்கு உதவி செய்து ஆன்மீக வலிமையை இக்காலக் கட்டத்தில் பெறுவார்கள்.

    தவக்காலத்தின் முதல் நாளான சாம்பல் புதன்கிழமை அனுசரிக்கப்படுகிறது. இது யூதர்களின் பாரம்பரியம். காலப்போக்கில் அனைத்து திருச்சபைகளும் `சாம்பல் புதன்' நாளை பின்பற்றி வருகிறார்கள்.

    குறிப்பாக கத்தோலிக்க திருச்சபை மக்கள் ஓலையினால் ஆன சிலுவையை எரித்து அதன் சாம்பலை நெற்றியில் பூசிக் கொள்வது வழக்கம். தவக்காலத்தின் தொடக்க நாளான சாம்பல் புதன் கிழமை வருகிற 14-ந்தேதி அனுசரிக்கப்படுகிறது. அன்றைய தினம் கிறிஸ்தவ ஆலயங்களில் காலையிலும் மாலையிலும் சிறப்பு ஆராதனை நடைபெறும்.

    அதனைதொடர்ந்து 6 வெள்ளிக்கிழமைகள் சிறப்பு வழிபாடு நடைபெறும். இயேசு உபவாசம் இருந்த தபசுக் காலத்தில் கிறிஸ்தவர்கள் கஷ்ட நாட்களாக கருதி அனைத்து வழிபாடுகளிலும் எளிமையாக பங்கேற்பார்கள். ஏழைகளுக்கு உதவி செய்யும் தியாக நாட்களாக இவை பின்பற்றப்படுகிறது.

    இதைத்தொடர்ந்து புனித வாரம் கடைபிடிக்கப்படுகிறது. இயேசு சிலுவையில் அறைந்து கொல்லப்படும் அந்த நாட்களை நினைவு கூர்ந்து புனிதவாரம் அனுசரிக்கப்படுகிறது. பெரிய வியாழன், புனித வெள்ளியை தொடர்ந்து இயேசு உயிர்த்தெழுந்த ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது. மார்ச் மாதம் 31-ந்தேதி ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.

    • சாயல்குடி அன்னை வேளாங்கண்ணி மாதா ஆலயத்தில் புனித வெள்ளி வழிபாடு நடந்தது.
    • இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டது போன்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

    சாயல்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அன்னை வேளாங்கண்ணி மாதா ஆலயம் சார்பில் புனித வெள்ளி வழிபாடு நடந்தது. ஆலய பங்குதந்தை பாஸ்கர் டேவிட் தலைமை வகித்தார். தொன்போஸ்கோ ஸ்கூல் ஆப் எக்சலன்ஸ் தாளாளர் ஆரோக்கியம், பள்ளி முதல்வர் ஆல்பிரட், நிர்வாகிகள் சார்லஸ், பிரபு, ரோஷன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக கீழ ஈரால் பங்குத்தந்தை அலெக்ஸ் கலந்து கொண்டார்.

    சாயல்குடி அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தில் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டது போன்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் மாதா ஆலய தலைவர் அந்தோணிராஜ், செயலாளர் ஆனந்தராஜ், பொருளாளர் பரலோகராஜ், முன்னாள் தலைவர்கள் ஜெயராஜ், அந்தோணிராஜ், முன்னாள் செயலாளர்கள காமராஜ், அருள் பால்ராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    • வாடிகன் நகரில் கடுங்குளிர் நிலவி வருகிறது.
    • இதனால் புனித வெள்ளி நிகழ்ச்சியில் போப் பிரான்சிஸ் பங்கேற்கவில்லை.

    வாடிகன்:

    இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட புனித வெள்ளி உலகமெங்கும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. கத்தோலிக்க மதத் தலைமையகமான வாடிகன் நகரில் போப் தலைமையில் லட்சக்கணக்கானோர் பங்கேற்பது வழக்கம்.

    போப் பிரான்சிஸ் கடந்த சில நாட்களுக்கு முன்பு மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு பிறகு அவர் குணமடைந்து வீடு திரும்பினார்.

    இந்நிலையில், வாடிகனில் கடுங்குளிர் நிலவுவதால் போப் பிரான்சிஸ் புனித வெள்ளி நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என வாடிகன் செய்தி தொடர்பாளர் மெட்டா புருனி தெரிவித்தார். ஆனாலும் வழக்கமான பிரார்த்தனை நிகழ்ச்சிகள் நடந்தன.

    ×